சுடச்சுட

  

  பிரச்னை எழுப்புவதால் மட்டுமே வெற்றி கிடைத்துவிடாது: காங்கிரஸ் மீது அமித் ஷா தாக்கு

  By DIN  |   Published on : 31st March 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  amith sha

  சட்டப் பேரவையில் பிரச்னை எழுப்புவதால் மட்டுமே, தேர்தல்களில் வெற்றி கிடைத்துவிடாது என்று காங்கிரஸ் கட்சியை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சாடினார்.
  குஜராத் மாநிலத்தில் உள்ள நாராயண்புரா தொகுதி எம்எல்ஏவான அவர், சட்டப்பேரவை நடவடிக்கைகளில் வியாழக்கிழமை பங்கேற்றுப் பேசினார். அவர் பேசியதாவது:
  1995-ஆம் ஆண்டுக்கு முன்பு, மிகப் பெரிய அளவிலான ஊழல்கள், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, மின்தட்டுப்பாடு ஆகிய பிரச்னைகள் காரணமாக, இந்த மாநில மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
  2001-ஆம் ஆண்டு, நரேந்திர மோடி, முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு, மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினோம். தற்போது ஒட்டுமொத்த உலகமும் 'குஜராத் வளர்ச்சி மாதிரி' குறித்தே பேசி வருகிறது.
  மாநிலத்தில் 1990-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், நிகழாண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலிலும், 150-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்.
  நிகழாண்டு இறுதியில் நடைபெறவுள்ள குஜராத் பேரவைத் தேர்தல், 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி, அவற்றுக்குப் பிறகும் வளர்ச்சிக்கான பாஜகவின் பயணம் தொடரும்.
  சட்டப் பேரவையில் பிரச்னைகளை எழுப்புவதால் மட்டுமே, தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியாது; தேர்தலில் வெற்றிபெற வேண்டுமெனில், முதலில் மக்களின் மனங்களை வென்றாக வேண்டும் என்றார் அமித் ஷா.
  எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு: பேசி முடித்த பிறகு பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சங்கர்சிங் வகேலாவை, பேரவையில் உள்ள அவரது அறைக்குச் சென்று மரியாதை நிமித்தமாக அமித் ஷா சந்தித்துப் பேசினார். அப்போது, மாநில முதல்வர் விஜய் ரூபானி, பாஜக மாநிலத் தலைவர் ஜித்து வகானி ஆகியோர் உடனிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai