சுடச்சுட

  

  பிற்படுத்தப்பட்டோர் நலனில் காங்கிரஸுக்கு அக்கறையில்லை: பாஜக

  By DIN  |   Published on : 31st March 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Eshwarappa

  பிற்படுத்தப்பட்டோர் நலனில் கர்நாடக காங்கிரஸுக்கு அக்கறையில்லை என அந்த மாநில சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா குற்றஞ்சாட்டினார்.
  இதுகுறித்து மைசூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
  கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியினர் பிற்படுத்தப்பட்டோரை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டோரை முதல்வர் சித்தராமையா வஞ்சித்து வருகிறார். இட ஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு, பட்ஜெட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கிய நிதி குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.
  முதல்வர் சித்தராமையாவின் சீடரான அமைச்சர் எச்.ஆஞ்சநேயா பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கிய நிதியில் 50 சதவீதத்தை மட்டுமே செலவு செய்துள்ளார். மீதமுள்ள ரூ. 37 ஆயிரம் கோடியை பிற்படுத்தப்பட்டோருக்கான வளர்ச்சித் திட்டத்துக்குப் பயன்படுத்தாமல் வைத்துள்ளார்.
  இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் சித்தராமையா உளறி வருகிறார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியதாக சித்தராமையா பிரசாரம் செய்து வருவதில் உண்மையில்லை.
  மைசூரு மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளையை முதல்வர் தடுக்கத் தவறிவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் குண்டல்பேட்டை, நஞ்சன்கூடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினருக்கு உரிய பாடத்தைப் புகட்டுவர்.
  2 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். வரும் நாட்களில் சங்கொல்லி ராயண்ணா படை நிகழ்ச்சிகளில் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா கலந்து கொள்வார் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai