சுடச்சுட

  

  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடை ஒன்றில் இருந்து செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடையின் உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.
  கொல்கத்தாவின் டில்ஜாலா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதியில் இருந்த கடையில் இருந்து முட்டைகளை வாங்கி வந்து சமையல் செய்தார். அதனைப் சாப்பிட்ட அவரது குடும்பத்தில் ஒருவர், முட்டையில் இருந்து பிளாஸ்டிக் வாடை வீசுவதாகத் தெரிவித்தார்.
  இதையடுத்து தான் வாங்கி வந்தவை செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் முட்டைகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் அப்பெண்ணுக்கு எழுந்தது. இதையடுத்து, மீதமிருந்த முட்டைகளை அருகில் இருந்தவர்களிடம் கொடுத்து பரிசோதித்து, அது பிளாஸ்டிக் முட்டைதான் என்பதை உறுதி செய்தார்.
  இதையடுத்து, முட்டையை விற்பனை செய்தவர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு முட்டையை விற்பனை செய்த கடைக்காரர் முகமது அன்சாரியைக் கைது செய்தனர். அவரது கடையில் இருந்த அனைத்து முட்டைகளையும் பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai