சுடச்சுட

  

  தனிமனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பெண் வழக்குரைஞர் ஃபர்கா பயீஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
  முஸ்லிம்களின் தலாக் விவாகரத்து முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடர்ந்தவர்களில் ஃபர்காவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பொது சிவில் சட்டம் தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
  நமது சமுதாயத்தில் திருமணம், விவாகரத்து உள்ளிட்ட விஷயங்களில் தனிமனித உரிமைகளைப் பாதுகாக்கும் சரத்துகளையும் சேர்த்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.
  நாட்டில் பெரும்பான்மையானவர்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதால் அரசு அதனைக் கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொள்ளவில்லை. ஆனால், சிறுபான்மையினருக்கு முக்கியமாக முஸ்லிம்களுக்கு இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஜாதி, மதத் தலைவர்களுக்கும், அரசியல்வாதிகளும்தான் தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக பொது சிவில் சட்டத்தைப் பிரச்னையாக்குகிறார்கள் என்ற அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai