சுடச்சுட

    

    மார்ச்-31 நிதியாண்டுக்கு மட்டுமல்ல இவற்றுக்கும் கடைசிதான்!

    By DIN  |   Published on : 31st March 2017 05:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rupee


    புது தில்லி: மார்ச் 31ம் தேதி என்றால் நிதியாண்டு முடியும் நாள் என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால், 2017ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி பல விஷயங்களுக்கு இறுதி நாள் என்பதுதான் சிறப்பம்சமே.

    எல்லாமே உங்களுக்குத் தெரிந்த விஷயங்கள்தான். ஆனால், அனைத்தையும் ஒன்று சேர்க்கும் போது, அதில் ஒரு சுவாரஸ்யம் ஏற்படுகிறது. அவ்வளவே..

    2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, மத்திய அரசு அறிவித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாற்றிக் கொள்ள இன்றுதான் கடைசி நாள். பொதுமக்கள் ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளவும் மத்திய அரசு அளித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

    எனவே, நாளை முதல் உங்கள் கையில் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகள், வெற்றுத் தாள்கள் மட்டுமே.

    அது மட்டும் அல்ல, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை 10க்கும் அதிகமாக கைவசம் வைத்திருந்தால் அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    அடுத்து, ரேஷன் அட்டைகள். ஏப்ரல் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் தொடங்கப்படுவதால் ஏறக்குறைய ரேஷன் அட்டைகளின் ஆயுளும் இன்றோடு முடிவடைகிறது. ஸ்மார்ட் கார்டுகள் வந்த பிறகே நமது கையில் இருக்கும் ரேஷன் அட்டைகள் பயனற்று போகுமே தவிர, அதுவரை அது ரேஷன் அட்டைதான் என்பதை மறக்க வேண்டாம்.

    ஜியோ... செல்போன் வந்த பிறகு மற்றவர்களின் தொலைபேசி எண்ணை நினைவில் வைத்துக் கொள்ளும் பழக்கம் போனது. ஜியோ வந்த பிறகு அவர்கள் எண்ணையே நினைவில் கொள்ளும் பழக்கமும் வழக்கொழிந்தது.

    தொலைத் தொடர்புத் துறையில் புரட்சி செய்த ஜியோவின் இலவச அழைப்பு மற்றும் இணையச் சேவை சலுகை இன்றோடு நிறைவு பெறுகிறது. 99 ரூபாய் செலுத்தி பிரைம் வாடிக்கையாளராக சேருவதற்கான காலக்கெடுவும் இன்றோடு நிறைவு பெறுகிறது.

    கருப்புப் பணம்! கருப்புப் பணம் வைத்திருப்போர், தாங்களாக முன் வந்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு வருமான வரித்துறை அளித்திருந்த காலக்கெடுவும் இன்றோடு முடிகிறது. மத்திய அரசின் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் தாமாக முன் வந்து 45% வரிப் பிடித்தத்துடன் தங்களது கருப்புப் பணத்தை வங்கியில் செலுத்திடுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது.

    இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, பிஎஸ்3 வாகனங்கள் புதிதாக சேர்ந்து கொண்டன. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, பிஎஸ்-3 வகை வாகனங்களை ஏப்ரல் 1ம் தேதிக்குப் பிறகு விற்பனை செய்யவோ, வாகனப் பதிவு செய்வோ தடை விதிக்கப்பட்டிருப்பதால், இன்றுடன் அவற்றின் விற்பனையும் முடிவுக்கு வருகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai