சுடச்சுட

    

    மோடியின் கூட்டத்தில் வெடிகுண்டு வைத்த ஐ.எஸ். ஆதரவுக் கும்பல்: விசாரணையில் தகவல்

    By DIN  |   Published on : 31st March 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லக்னெள நகரில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு பங்கேற்ற கூட்டத்தில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் வெடிகுண்டு வைத்து, அது வெடிக்காமல் போனது அந்தக் கும்பலைச் சேர்ந்தர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
    மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரிலிருந்து, உஜ்ஜயின் நகரை நோக்கி இந்த மாதம் 7-ஆம் தேதி சென்று கொண்டிருந்த ரயிலில், சிறிய அளவிலான குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 10 பேர் காயமடைந்தனர்.
    இந்தத் தாக்குலை நிகழ்த்திய ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவுக் கும்பலைக் கைது செய்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவுக் கும்பலைச் சேர்ந்த முகமது டானிஷ், அத்தீஃப் முஸாஃபர் ஆகிய இருவரிடம் நடைபெற்ற விசாரணையில், அவர்கள் ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்த முயன்றது தெரிய வந்தது. உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னெளவின் ராம்லீலா மைதானத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி தசரா திருவிழாவையொட்டி கூட்டம் நடைபெற்றது.
    பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்காக, முகமது டானிஷ், அத்தீஃப் முஸாஃபர் ஆகியோர் முடிவு செய்து, கூட்டம் நடைபெற்ற பகுதியில் ஒரு குப்பைத் தொட்டியில் சொந்தமாகத் தயாரித்த வெடிகுண்டை வைத்தனர். எனினும், அந்த குண்டு வெடிக்கவில்லை.
    இரு நாள்களுக்குப் பிறகு குண்டு வைத்த பகுதிக்குச் சென்று பார்த்தபோது, வெடிகுண்டின் மின்கம்பிகள் மட்டுமே கிடைத்ததாக விசாரணையின்போது அவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai