சுடச்சுட

    

    விவசாய நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு: பாஜக திட்டம்

    By DIN  |   Published on : 31st March 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நரேந்திர மோடி தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்காக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
    வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பாஜக விவசாயிகள் அணி இந்த முடிவை மேற்கொண்டது. விவசாயிகள் மேம்பாட்டுக்கான மோடி அரசின் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை எற்படுத்தும் வகையில், இந்தியா முழுவதும் அடுத்த மாதம் 6-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜக விவசாயிகள் அணி நடத்தும்.
    இதுகுறித்து அந்த அணியின் தலைவர் வீரேந்திர சிங் கூறுகையில், ''அம்பேத்கரின் கனவை நினைவாக்கும் வகையில், மோடி அரசு விவசாயிகளின் நல்வாழ்வுக்காக செயல்படுத்தி வரும் ஜன்தன், முத்ரா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்போம்'' என்று தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai