சுடச்சுட

  

  கோவாவில் பொய்யாக பாலியல் பலாத்கார புகார் அளித்த இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
  இந்தூரைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் வடக்கு கோவாவில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார். அப்போது, மும்பையைச் சேர்ந்த 56 வயது கட்டுமான நிறுவன உரிமையாளர், தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த ஆண்டு கோவா போலீஸில் புகார் அளித்தார். அந்த நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
  இதையடுத்து, அந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் முன் ஜாமீன் பெற்றதுடன், தன்மீது புகார் அளித்த பெண்ணுக்கு எதிராகவும், அவருடன் சேர்ந்த 11 பேருக்கு எதிராகவும் ஒரு புகார் அளித்தார். அதில், தனது சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்துடனும், தன்னை மிரட்டி பணம் பறிப்பதற்காகவும் அப்பெண் பொய்யாக புகார் அளித்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
  இதையடுத்து, போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பலாத்கார சம்பவம் நடத்தாகக் கூறப்படும் தினத்தில் அந்த கட்டுமான நிறுவன அதிபர் கோவாவில் இல்லை என்பதும் மும்பையில்தான் இருந்தார் என்பதும் அவரது செல்லிடப்பேசி, மும்பையில் அவரது அலுவலகத்தில் பதிவான சிசிடிவி விடியோ பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
  இதையடுத்து, பொய்யாக பலாத்கார புகார் கூறியதாக அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை
  போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai