சுடச்சுட

  

  கோவாவில் வெங்காயம் போல் விற்பனையாகும் "சிம்' கார்டுகள்

  By DIN  |   Published on : 28th May 2017 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவா மாநிலத்தில் சமூக விரோதிகள் வெங்காயம் வாங்குவதைப் போல செல்லிடப் பேசிகளுக்கான "சிம்' அட்டைகளை மிக எளிதில் வாங்கி வருவதாக அந்த மாநில காவல்துறை தலைவர் முக்தேஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
  போலி ஆவணங்களை சமர்ப்பித்து சமூக விரோதிகள் மிக எளிதில் "சிம்' அட்டைகளைப் பெற்று வருகின்றனர்.
  வேறு நபர்களின் புகைப்படம், பெயர், போலிக் கையெழுத்து ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களால் "சிம்' அட்டைகளைப் பெற முடிகிறது.
  தகவல் தொடர்பு நிறுவனங்கள் தங்களிடம் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை நேரில் சென்று சரிபார்ப்பது கிடையாது. இதனால், கோவாவில் "சிம்' அட்டைகள் வெங்காயம், உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகளைப் போல விற்பனையாகின்றன. வாடிக்கையாளர் அடையாள விதிமுறையை (கேஒய்சி) நிறுவனங்கள் அலட்சியம் செய்வது, சமூக விரோதிகளுக்கு
  சாதகமாக அமைந்துள்ளது.
  இதன் காரணமாக, பல வழக்குகளில் "சிம்' அட்டைகளை உண்மையிலேயே பயன்படுத்தியவர் யார் என்பதைக் கண்டறிவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai