Enable Javscript for better performance
மகாராஷ்டிரம்: லாரி கவிழ்ந்து 10 தொழிலாளர்கள் பலி- Dinamani

சுடச்சுட

    

    மகாராஷ்டிரத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தொழிலாளர்கள் பலியாகி விட்டனர். 22 பேர் காயமடைந்தனர்.
    கர்நாடகத்தின் பிஜாபூர் நகரில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி மகாராஷ்டிரத்தின் கராட் நகரை நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது.
    அந்த லாரி, சாங்க்லி மாவட்டத்தின் தஸ்கவோன் நகருக்கு அருகே வளைவு ஒன்றில் திரும்பியபோது திடீரென்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
    அவர்களில் 11 பேர் மிரஜ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தஸ்கவோன் பகுதியில் உள்ள மருத்துவமனையி
    லும் சிகிச்சை பெற்று வருவதகாக போலீஸார் தெரிவித்தனர்.
    இறந்தவர்களில் 6 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai