Enable Javscript for better performance
வீர மரணமடையும் போலீஸாரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: உ.பி. அரசு- Dinamani

சுடச்சுட

    

    வீர மரணமடையும் போலீஸாரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: உ.பி. அரசு

    By DIN  |   Published on : 22nd October 2017 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    compensation

    பணியின்போது உயிர்த் தியாகம் புரிந்த காவலர் ஒருவரின் உறவினரைக் கெளரவிக்கும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

    பாதுகாப்புப் பணியின்போது உயிர் துறக்கும் போலீஸாரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை இரு மடங்காக உயர்த்தப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதனை லக்னெளவில் சனிக்கிழமை நடைபெற்ற காவலர் வீரவணக்க தின விழாவில் அவர் தெரிவித்தார்.
    அதன்படி, வீரமரணமடையும் காவலர்களின் குடும்பத்தினருக்கு இனி நிவாரணமாக ரூ.50 லட்சம் கிடைக்கும். 
    அந்த விழாவில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பேணிக் காக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
    மொஹரம், பக்ரீத், துர்கை பூஜை போன்ற பண்டிகைகளின்போது மாநிலத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் பெருமைப்படக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது:
    மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சட்டம் - ஒழுங்கு முன்பைவிட மேம்பட்டுள்ளது. பெண்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டது. அதுமட்டுமன்றி, மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேறு சில திட்டங்களும் வகுக்கப்பட்டன.
    மொஹரம், துர்கை பூஜை, பக்ரீத், தசரா உள்பட பல்வேறு பண்டிகைகளை மக்கள் அமைதியுடன் கொண்டாடும் வகையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாநிலத்தில் அமைதி நிலவுவதற்கு போலீஸாரின் பங்கு மிக முக்கியமானது.
    மக்களை காக்க காவல் துறையினர் மேற்கொண்டு வரும் தியாகங்கள் அளப்பரியவை. 
    சவாலான பணிச் சூழல்களில் தங்களது உயிரைத் தியாகம் செய்து பிறந்த மண்ணை அவர்கள் காக்கின்றனர். அவ்வாறு வீரமரணடையும் போலீஸாரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை இரு மடங்காக உயர்த்தப்படும். அதன்படி, ரூ.50 லட்சம் அவர்களுக்கு வழங்கப்படும் என்றர் யோகி ஆதித்யநாத்.
    இந்நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்த கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai