சிலை கடத்தல் வழக்கில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் ஆணை பிறப்பித்தது. ஆனால் தமிழக அரசின் இந்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தங்கள் தரப்பை கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.