அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்-இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு புதிய கட்டத்தை எட்டியது என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர் தெரிவித்தார்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவில் ஏற்பட்ட பரிணாமம் குறித்து அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் லலித் மான்சிங்குடன் கென்னத் ஜஸ்டர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், வாஜ்பாய், ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு புதிய கட்டத்தை எட்டியது' என்றார்.
மான்சிங் கூறுகையில், முந்தைய காலங்களில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பு அதிக அளவில் இல்லை. தற்போதைய காலகட்டத்தில் இந்திய-அமெரிக்க உறவு மேம்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பெரும்பாலான இந்தியர்கள் மாணவர்களாகவும், பணிபுரிபவர்களாகவும் உள்ளனர். அந்நாட்டில் சுமார் 75,000 இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர்' என்றார்.
புத்தாக்கத்துக்கும், தொழில்முனைவோர்களுக்கும் மேலும் அதிக வாய்ப்பை இந்தியா ஏற்படுத்தித் தர வேண்டும்' என்று கென்னத் கூறினார்.