2000 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏன்? அருண் ஜேட்லி விளக்கம்

இந்தியாவில் போதுமான அளவுக்கு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும், தாற்காலிக பணத்தட்டுப்பாடு உடனடியாக சரிசெய்யப்படும் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
2000 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏன்? அருண் ஜேட்லி விளக்கம்


புது தில்லி: இந்தியாவில் போதுமான அளவுக்கு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும், தாற்காலிக பணத்தட்டுப்பாடு உடனடியாக சரிசெய்யப்படும் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இந்தியாவில், குஜராத், மகாராஷ்டிராவின் கிழக்கு மாவட்டங்கள், மத்தியப் பிரதேசம், பிகார், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.

ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டும், ஏராளமானோர் 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்து டிவிட்டரில் இன்று விளக்கம் அளித்த அருண் ஜேட்லி, நாட்டில் பணப்புழக்கம் குறித்து ஆய்வு செய்துள்ளேன்.  ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாட்டில் போதுமான அளவுக்கு பணப்புழக்கம் இருக்கிறது. வங்கிகளிலும் போதுமான பணம் கையிருப்பில் உள்ளது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் திடீர் பணத்தேவை, அதிக பணத்தேவை போன்றவை ஏற்பட்டு, ஒரே நேரத்தில் அதிகமானோர் ஏடிஎம்மை பயன்படுத்துவதால் பிகார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் தாற்காலிக  பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுவும் உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப போதுமான அளவுக்கு வங்கிகளிடம் கையிருப்பு உள்ளது.  தாற்காலிக பணத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே போல, பணத்தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய நிதியமைச்சகம் உடனடியாக கவனத்தில் கொண்டு, மாநிலம் வாரியாக குழுக்கள் அமைத்து, நிலைமையை ஆய்வு செய்து சீரமைக்கும் என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் ஷுக்லா கூறியுள்ளார். 

இதே போல, தேவைப்படும் மாநிலங்களுக்கு மற்றொரு மாநிலத்தில் இருந்து பணப்பரிமாற்றம் செய்ய, ஆர்பிஐ தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிலைமை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் சீரமைக்கப்படும் என்றும் ஷுக்லா கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஆர்பிஐ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவில் தற்போதைய பணப் புழக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய நிலையை அதாவது ரூ.17 லட்சம் கோடியை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com