என்எஸ்ஜி.யில் இந்தியா உறுப்பினராக ஜெர்மனி ஆதரவு

அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு ஜெர்மனி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு ஜெர்மனி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கான ஜெர்மனி நாட்டு துணைத் தூதர் ஜெஸ்பர் வெய்க் பேசியதாவது: ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாடு அமைப்புகளில் உறுப்பினராக இந்தியா எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஜெர்மனி முழு ஆதரவளிக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே, என்எஸ்ஜி அமைப்பில் இந்தியா உறுப்பினராவதையும் ஜெர்மனி ஆதரிக்கிறது.
4 ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாடு அமைப்புகளிலும் இந்தியா உறுப்பினரானால், சர்வதேச ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாடு அமைப்பு மேலும் வலுவடையும் என்று ஜெர்மனி நம்புகிறது என்றார் ஜெஸ்பர் வெய்க்.
சர்வதேச அளவில் 4 ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாடு அமைப்புகள் உள்ளன. இதில் ஏவுகணை தொழில்நுட்பம் கட்டுப்பாடு அமைப்பு, வாஸ்ஸனர் அமைப்பு, ஆஸ்திரேலிய குழு ஆகிய 3 அமைப்புகளில் இந்தியா உறுப்பினராக உள்ளது. 
என்எஸ்ஜி எனப்படும் 48 நாடுகளைக் கொண்ட அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பினராக இந்தியா முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு, அமெரிக்கா, ரஷியா போன்ற வல்லரசு நாடுகளும் வெளிப்படையாக ஆதரவு அளித்து வருகின்றன.
இருப்பினும், இந்தியாவின் முயற்சிகளுக்கு என்எஸ்ஜியில் அங்கம் வகிக்கும் சீனா மட்டும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனால், என்எஸ்ஜியில் உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com