சாமியார் ஆஸாராம் வழக்கு ராஜஸ்தான் போலீஸாரின் மனு மீது இன்று விசாரணை

சாமியார் ஆஸாராம் பாபுவுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில், சிறையில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வெளியிடக்கோரி ராஜஸ்தான் போலீஸார் மனு தாக்கல் செய்திருக்கும்

சாமியார் ஆஸாராம் பாபுவுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில், சிறையில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வெளியிடக்கோரி ராஜஸ்தான் போலீஸார் மனு தாக்கல் செய்திருக்கும் மனு மீது ஜோத்பூர் உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப்.17) விசாரணை நடத்தவுள்ளது.
சாமியார் ஆஸாராம் பாபுவுக்கு எதிரான வழக்கில், சிறப்பு எஸ்.சி., எஸ்.டி. விசாரணை நீதிமன்றத்தால் வரும் 25ஆம் தீர்ப்பு வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், ஜோத்பூர் உயர் நீதிமன்றத்தில் ராஜஸ்தான் போலீஸார் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், விசாரணை நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வெளியிடப்பட்டால், பாதுகாப்புப் படையினருக்கும், ஆஸாராம் பாபுவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூள வாய்ப்புள்ளது; இதனால் சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே, சிறையில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தால் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, ஜோத்பூர் உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.
இதனிடையே, ஜோத்பூர் நகர காவல்துறை ஆணையர் அசோக் ரத்தோரிடம், தீர்ப்பு தேதியை ஏப்ரல் 25 இல் இருந்து ஏப்ரல் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க போலீஸார் கோரிக்கை விடுத்திருப்பதாக வெளியான செய்திகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அந்த செய்திகளில் உண்மையில்லை என்று மறுப்புத் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள், ஆஸாராம் பாபு, அவரது மகன் நாராயண் சாய் ஆகியோருக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு, எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை கடந்த 7ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தீர்ப்பு வரும் 25ஆம் தேதி வெளியிடப்படும் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com