தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்: மாலை 3 மணி நிலவரம்  

இருமாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி ராஜஸ்தானில் 59.43 சதவீதமும், தெலங்கானாவில் 56.17 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்: மாலை 3 மணி நிலவரம்  

சென்னை: இருமாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி ராஜஸ்தானில் 59.43 சதவீதமும், தெலங்கானாவில் 56.17 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

200 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் வெள்ளி காலை  8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  மதியம் 1 மணி நிலவரப்படி 41.53% வாக்குகள் பதிவாகி இருந்தது.  மதியம் 2 மணி நிலவரப்படி சுமார் 55% வாக்குகள் பதிவாகி இருந்தது.  மாலை 3 மணி நிலவரப்படி  அங்கு 59.43 சதவீத வாக்குகள் பதிவாகியு ள்ளது. 

அதேபோல 119 இடங்களை கொண்ட  தெலங்கானா சட்டப்பேரவைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மதியம் 1 மணி நிலவரப்படி 49.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 3 மணி நிலவரப்படி 56.17 சதவீத  வாக்குகளும் பதிவாகி உள்ளது.

இரண்டு தேர்தல்களிலும் மாலை 5 மணியோடு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, அப்போது வரை வரிசையில் நிற்போருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிகிறது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com