மத்தியப் பிரதேச முதல்வராக 17-இல் பதவியேற்கிறார் கமல்நாத்!

மத்தியப் பிரதேச முதல்வராக அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்
மத்தியப் பிரதேச முதல்வராக 17-இல் பதவியேற்கிறார் கமல்நாத்!


மத்தியப் பிரதேச முதல்வராக அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பலகட்ட ஆலோசனைக்குப் பிறகு, கமல்நாத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அம்மாநில முதல்வராக வரும் 17-ஆம் தேதி கமல்நாத் பதவியேற்கவுள்ளார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலுமே பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். மாநில தலைவர்களுக்குள் முதல்வர் பதவிக்கு போட்டி ஏற்படும் என்பதால், தேர்தலுக்கு முன்பு சர்ச்சையைத் தவிர்க்கும் நோக்கில் முதல்வர் வேட்பாளர்கள் யாரையும் காங்கிரஸ் அறிவிக்கவில்லை. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்ட நிலையில், அக்கட்சித் தலைவர்கள் மத்தியில் முதல்வர் பதவிக்கு போட்டி நிலவுவதால் முதல்வரை முடிவு செய்வதில் குழப்பம் நீடித்தது.

மூன்று மாநில முதல்வர்கள் யார் என்பதை முடிவு செய்வதற்காக தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை தீவிர ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் பங்கேற்றனர். ராஜஸ்தானில் முதல்வர் பதவியைப் பெற போட்டியில் உள்ள அசோக் கெலாட், சச்சின் பைலட், மத்தியப் பிரதேசத்தில் போட்டியில் இருந்த கமல்நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் ராகுல் காந்தியை தனித்தனியாக சந்தித்துப் பேசி தங்கள் தரப்பு கருத்துகளைத் தெரிவித்தனர். 

இதையடுத்து மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் அறிவிக்கப்பட்டார். ராஜஸ்தான், சத்தீஸ்கர் முதல்வர் பதவி குறித்து இன்று வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சி தலைவராக கமல்நாத் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 72 வயதாகும் கமல்நாத் மத்திய அமைச்சராக பலமுறை பதவி வகித்துள்ளார். இப்போது முதல்முறையாக மத்தியப் பிரதேச முதல்வராக வரும் 17 ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. 

பதவியேற்பு விழா, போபாலில் உள்ள லால் பாரடே கிரவுண்டில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. 

காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 1 இடத்தில் வெற்றி பெற்ற சமாஜ்வாடி, 2 இடங்களில் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ், 4 இடங்களில் வெற்றி பெற்ற சுயேட்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

109 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com