1965-இல் காஷ்மீரை கைப்பற்ற முயன்றது பாகிஸ்தான்: முன்னாள் ராணுவ துணைத் தளபதி

கடந்த 1962-இல் நடைபெற்ற போரில் இந்தியாவை சீனா தோற்கடித்த பிறகு, ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தான் கைப்பற்ற முயன்றது என்று இந்திய ராணுவத்தின் முன்னாள் துணைத் தளபதி என்.எஸ்.பிரார் கூறியுள்ளார்.

கடந்த 1962-இல் நடைபெற்ற போரில் இந்தியாவை சீனா தோற்கடித்த பிறகு, ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தான் கைப்பற்ற முயன்றது என்று இந்திய ராணுவத்தின் முன்னாள் துணைத் தளபதி என்.எஸ்.பிரார் கூறியுள்ளார்.

கடந்த 1965-ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த போரை விளக்கும் விதமாக நூல் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அந்த நூலில் அவர் தெரிவித்துள்ளதாவது:

1962-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் அண்டை நாடான சீனாவுக்கும் இடையே நிகழ்ந்த போரில் இந்தியா தோல்வி அடைந்தது. அது, மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. இதையடுத்து, கடந்த 1965-ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதத்தில் கட்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் தனது ராணுவத்தைப் பயன்படுத்தி காஷ்மீரைக் கைப்பற்ற முயன்றது.

மேலும்,  ராணுவம், தரமான, அதிக எண்ணிக்கையிலான போர்த் தளவாடங்கள், பீரங்கி வண்டிகள் ஆகியவற்றைக் கொண்டு பாகிஸ்தான் தனது படை பலத்தை வலுப்படுத்தியது. அதுமட்டுமன்றி, இந்திய ராணுவம் போதிய தளவாடங்களின்றி, தயார் நிலையில் இல்லை என்று பாகிஸ்தான் கருதியது. இதன்மூலம், இந்தியாவுடன் போரிட்டு தனது அரசியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இதுவே சரியான தருணம் என்றும் பாகிஸ்தான் கருதியது என்று அந்த நூலில் என்.எஸ்.பிரார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெக்காவின் அதிநவீன ஆயுதங்களை பாகிஸ்தான் ராணுவம் வைத்திருந்தது, அவற்றைப் பயன்படுத்தி, சர்வதேச எல்லையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்தியாவில் உள்ள கெம் கரன் நகரைக் கைப்பற்றியது, இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், துணைத் தளபதியாக பங்கேற்றது போன்ற சுவாரசியமான தகவல்கள் அந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com