பாஜகவின் வளர்ச்சித் திட்டத்தை எந்தக் கூட்டணியாலும் தடுக்க முடியாது: அமித் ஷா

பாஜக மற்றும் அதன் வளர்ச்சித் திட்டங்களை எந்த ஒரு மகாகூட்டணியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பாஜக தலைவர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பாஜகவின் வளர்ச்சித் திட்டத்தை எந்தக் கூட்டணியாலும் தடுக்க முடியாது: அமித் ஷா

பாஜக மற்றும் அதன் வளர்ச்சித் திட்டங்களை எந்த ஒரு மகாகூட்டணியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பாஜக தலைவர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய யுவ மோர்ச்சா அமைப்பின் கூட்டம் கடந்த இரு நாள்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள யுவ மோர்ச்சா அமைப்பின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர். அனைத்து மாநிலங்களின் பாஜக தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் இறுதி நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:
அனைவரும் இணைந்து செயல்பட்டால் எந்த ஒரு மகாகூட்டணியாலும் நமது கட்சியின் வளர்ச்சி திட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது. நாட்டில் உள்ள அனைவருக்கும் கட்சியின் வளர்ச்சி திட்டம் குறித்து இளைஞர் அமைப்பினர் எடுத்துக்கூற வேண்டும் என்றார்.
2019-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஊரகப் பகுதிகளில் உள்ள வேட்பாளர்களுக்கும் கட்சியின் திட்டங்கள் குறித்து தெரியப்படுத்தும் வகையில் இளைஞர் அணி கூட்டம் நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில் மோடி அரசின் முக்கிய சாதனைகள், திட்டங்கள், கட்சி மேலாண்மை, சமூக வலைதளங்களில் கட்சியின் திட்டங்கள் குறித்து பரப்புவது உள்ளிட்டவை குறித்து இளைஞர் அணி அமைப்பினருக்கு கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com