பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நாட்டில் இடமளிக்கக் கூடாது: மம்தா பானர்ஜி

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நாட்டில் இடமளிக்கக் கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நாட்டில் இடமளிக்கக் கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மம்தா சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், " தில்லியில் நிர்பயா பாலியல் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நாட்டில் இடமளிக்கக் கூடாது. ஒரு சமூகமாக, பெண்கள் வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான, சிறந்த இடமாக நாட்டை  உருவாக்க வேண்டியது நமது கடமை' என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு, டிசம்பர் 16-ஆம் தேதி தில்லியில் பேருந்தில் நண்பருடன் பயணம் செய்த மருத்துவ மாணவி நிர்பயா(23), பேருந்தில் இருந்த சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். அதையடுத்து கடுமையாக தாக்கப்பட்ட அவர், பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிர்பயாவை சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதையடுத்து அந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரும் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.  அதில் ஒருவர் சிறையிலேயே தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். 4 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 
இந்த குற்றத்தில் தொடர்புடைய ஒருவர் 18 வயதுக்குள்பட்டவர் என்பதால், அவர் 3 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com