பெய்டி புயலின் வேகம் 16 கி.மீட்டரில் இருந்து 23 கி.மீட்டராக அதிகரித்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக மையம் கொண்டுள்ள பெய்ட்டி, மணிக்கு 23 கிலோ மீட்டராக வேகம் அதிகரித்து ஆந்திராவை நோக்கி
பெய்டி புயலின் வேகம் 16 கி.மீட்டரில் இருந்து 23 கி.மீட்டராக அதிகரித்துள்ளது: வானிலை ஆய்வு மையம்


சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக மையம் கொண்டுள்ள பெய்ட்டி, மணிக்கு 23 கிலோ மீட்டராக வேகம் அதிகரித்து ஆந்திராவை நோக்கி செல்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் சனிக்கிழமை இரவு உருவான "பெய்ட்டி' புயல் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் 11 கி.மீ. வேகத்தில் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து வந்தது. அப்போது, சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. 

இந்த புயல் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, தென் மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது. 16 கி.மீ. வேகத்தில் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்தது. 

அப்போது, சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு, தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி, பெய்ட்டி புயல் தீவிர புயலாக மாறியது. இது சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கே 300 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. 

இந்நிலையில், புயலின் வேகம் 16 கி.மீட்டரில் இருந்து 23 கி.மீட்டராக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அருகே 320 கி.மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 160 கி.மீட்டர் தொலைவிலும், காக்கி நாடாவுக்கு தெற்கே 190 கி.மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 

புயலாக வலு குறைந்து பிற்பகல் ஆந்திர கடலோரத்தில் காக்கிநாடா கடற்கரை அருகே கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரையைக்கடக்கும் போது 70 - 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com