புடவை அணிந்து 18ம் படி ஏறி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த 4 திருநங்கைகள்

புடவை அணிந்த 4 திருநங்கைகள், இருமுடி ஏந்தி சபரிமலை வந்து 18ம் படி ஏறி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
புடவை அணிந்து 18ம் படி ஏறி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த 4 திருநங்கைகள்

சபரிமலை: புடவை அணிந்த 4 திருநங்கைகள், இருமுடி ஏந்தி சபரிமலை வந்து 18ம் படி ஏறி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

கடந்த ஞாயிறன்று சபரிமலைக்கு வந்த 4 திருநங்கைகளும், புடவை அணிந்துகொண்டு சபரிமலை வந்து சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற தொடர் சட்டப் போராட்டத்தின் காரணமாக நேற்று அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை எருமேலி வந்த 4 பேரும், 8 மணியளவில் பம்பையில் இருந்து தங்களது சபரிமலை பயணத்தைத் தொடங்கினர்.

காலை 9.45 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் 4 திருநங்கைகளும் 18ம் படி ஏறி, சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து தங்களது சபரிமலை பயணத்தை நிறைவு செய்தனர். இவர்களுக்கு எங்குமே இடையூறு ஏற்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com