99% பொருட்களை 18% குறைவான வரியின் கீழ் கொண்டு வரத் திட்டம்: பிரதமர்

99 சதவீதம் பொருட்களை 18 சதவீதத்துக்கும் குறைவான வரியின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை தெரிவித்தார். 
99% பொருட்களை 18% குறைவான வரியின் கீழ் கொண்டு வரத் திட்டம்: பிரதமர்

99 சதவீதம் பொருட்களை 18 சதவீதத்துக்கும் குறைவான வரியின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது,

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் 99 சதவீத பொருட்களை 18 சதவீதத்துக்கும் குறைவான வரியின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதுபோன்று 28 சதவீத வரியானது சில குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே விதிக்கப்படும். அதிலும் குறிப்பாக சொகுசுப் பொருட்கள் மட்டுமே இந்த 28 சதவீத வரியின் கீழ் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

31-ஆவது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான கூட்டம் வருகிற 22-ஆம் தேதி தில்லியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது இதுகுறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com