சுடச்சுட

  

  வட இந்தியர்களின் வருகையால் பாதிக்கப்படும் வேலை வாய்ப்புகள்: ம.பி முதல்வர் பேச்சால் வெடித்த சர்ச்சை 

  By DIN  |   Published on : 18th December 2018 04:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kamalnath

   

  புது தில்லி  மத்திய பிரதேசத்தில் வட இந்தியர்களின் வருகையால் உள்ளூர்வாசிகளின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக, மாநில முதல்வர் கமல்நாத் பேசியுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது. 

  மத்திய பிரதேச மாநில முதல்வராக காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்நாத் சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'வட இந்திய மாநிலங்களான பிகார் மற்றும் உத்தர பிரதேசம் ஆகியவற்றிலிருந்து அதிக அளவு தொழிலாளர்கள் வேலை தேடி மத்திய பிரதேசம் வருவதால், உள்ளூர் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக' கூறியிருந்தார். அவரது இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.         

  இதுகுறித்துக் கருத்துதெரிவித்துள்ள மத்திய அமைச்சரும், பிகாரைச் சேர்ந்தவருமான ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, 'இத்தகைய கருத்துக்கள் துரதிர்ஷடவசமானது' என்று தெரிவித்தார். 

  அத்துடன் சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும், உ.பி மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் சிங் யாதவ் கூறும்போது, 'இதுமிகவும் தவறு; முதலில் மஹாராஷ்டிரா, பின்னர் தில்லி, தற்போது மத்திய பிரதேசத்திலிருந்து இந்தக் குரல் எழுந்துள்ளது. வட இந்தியர்கள் வெளியேறுவதாக முடிவு செய்து விட்டால் யார்தான் அங்கு வருவார்கள்?' என்று தெரிவித்தார். 

  கமல்நாத்தின் இந்த கருத்து குறித்து தில்லி பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்ட போது, 'கமலநாத்தின் கருத்துக்களை நான் பார்க்கவோ, கேட்கவோ இல்லை' என்று கருத்து தெரிவித்தார்.    

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai