பிரதமர் வேட்பாளராக ராகுல் தேர்வு எதிர்கட்சிகளின் விருப்பமல்ல: அகிலேஷ் யாதவ்

எந்தக் கட்சி அதிக இடங்களைப் பெறுகிறதோ, அவர்கள்தான் அடுத்த பிரதமரை தீர்மானிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் மஜித் மேமோன் கூறினார். 
பிரதமர் வேட்பாளராக ராகுல் தேர்வு எதிர்கட்சிகளின் விருப்பமல்ல: அகிலேஷ் யாதவ்

மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

சென்னை, ராயப்பேட்டையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில், ராகுல் பிரதமராக நான் முன்மொழிகிறேன். அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து ராகுல் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்நிலையில், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது, தேசிய அளவிலான எதிர்கட்சிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்த முதலில் முயற்சித்தவர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தான். இந்த முயற்சி தொடரும். பிரதமர் வேட்பாளராக ராகுலை ஒரு குறிப்பிட்ட கட்சி முன்மொழிவது எதிர்கட்சிகளின் விருப்பமாகாது. ஆனால், பாஜக இதுகுறித்து மகிழ்ச்சியடைய வேண்டாம். ஏனென்றால் பாஜக-வை வீழ்த்த மக்கள் தயாராக உள்ளனர் என்று தெரிவித்தார்.

அதுபோன்று, பிரதமர் வேட்பாளர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர். காங்கிரஸ் தலைவர் ராகுல் கூட இவ்விவகாரத்தில் தேர்தலுக்குப் பின்னர் முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி அதிக இடங்களைப் பெறுகிறதோ, அவர்கள்தான் அடுத்த பிரதமரை தீர்மானிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் மஜித் மேமோன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com