மும்பை இஎஸ்ஐ மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

மும்பையின் அந்தேரி பகுதியில் செயல்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின்
மும்பை இஎஸ்ஐ மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

மும்பையின் அந்தேரி பகுதியில் செயல்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின்  எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

மும்பையின் அந்தேரி பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ‘காம்கார்’ என்ற தொழிலாளர் நல மருத்துவமனை (இஎஸ்ஐசி) உள்ளது.

5 மாடி கட்டம் கொண்ட இந்த மருத்துவமனையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில், மருத்துவமனையின் 4-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியதால், அதிகளவில் கரும்புகை வெளியேறி சிறிது நேரத்திலேயே மருத்துவமனை பகுதி முழுவதையும் புகை மண்டலம் சூழ்ந்தது. 

இதையடுத்து மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள், உள்நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியேற முயன்றார்கள்.
 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்கொள் கொண்டு வந்தனர். 

தீயணைப்பு பணி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் ராட்சத கிரேன் மூலம் மருத்துவமனைக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியிலும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். இதில், 141 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 

இந்த தீ விபத்தில் சிக்கி நேற்று 5 பேர் உயிரிழந்தனர். 141 காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்நிலையில், பலத்த தீ காயங்களுடன் சிகிச்சை பெறுறு வந்தவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி 3 பேர் இன்று உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com