ரூ.41 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள்: பிரதமர் மோடி துவக்கி வைப்பு

மகாராஷ்டிர மாநிலத்துக்கு ரூ.41,000 கோடி மதிப்பிலான அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை தொடங்கி வைத்தார். 
ரூ.41 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள்: பிரதமர் மோடி துவக்கி வைப்பு

மகாராஷ்டிர மாநிலத்துக்கு ரூ.41,000 கோடி மதிப்பிலான அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை தொடங்கி வைத்தார். 

தாணே-பிவன்டி-கல்யாண் பகுதிகளை இணைக்கும் மெட்ரோ 5 வழித்தடம், தஹிசார்-மிரா பாயந்தர் பகுதிகளை இணைக்கும் மெட்ரோ 9 வழித்தடம் ஆகிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் தாணே-பிவன்டி-கல்யான் வழித்தடமானது ரூ.8,416 கோடி மதிப்பில் 24.9 கி.மீ. தொலைவுக்கு கட்டமைக்கப்படுகிறது. 

மொத்தம் 17 ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும் இந்த வழித்தடத்தில் 6 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் இயக்கப்படும். தினமும் 2.29 லட்சம் பேர் பயணிக்கும் வகையிலான இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் 2021-இல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், 10.3 கி.மீ. தூரம் கொண்ட தஹிசார்-மிரா பாயந்தர் வழித்தடத்தில் மொத்தம் 8 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. 2022-இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்துக்கான மதிப்பு ரூ.6,607 கோடியாகும். இந்த இரு திட்டங்களையும் மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் செயல்படுத்துகிறது. 

நகர மற்றும் தொழிற்பேட்டை மேம்பாட்டு கழகத்தின் (சிட்கோ) குடியிருப்புகள் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 
இத்திட்டத்தில், பிரதமர் குடியிருப்பு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.18,000 கோடியில் 89,771 வீடுகள் வழங்கப்படுகின்றன. 

ஹின்ஜேவாடி-சிவாஜிநகர் இடையே முன்மொழியப்பட்டுள்ள 3-ஆவது மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். புதிய மெட்ரோ ரயில் திட்டத்தின்படி அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், புணே பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தால் அமல்படுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com