ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்களை தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் 2 மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்களை தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் 2 மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவு அதன் இணையதளத்தில் கடந்த 15-ஆம் தேதி (சனிக்கிழமை) பதிவேற்றம் செய்யப்பட்டது. 

அதில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு கடந்த மே 28 - ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், 3 வாரங்களுக்குள் ஆலை செயல்படுவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும், இதற்கான காரணங்களையும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தது.  

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இதன்படி, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வது குறித்து தில்லியில் உள்ள தமிழக அரசு வழக்குரைஞர்கள் மூத்த வழக்குரைஞர்களுடன் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். மேல்முறையீட்டு மனுவுக்கான இறுதி வடிவம் அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் 2 மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயத் உத்தரவை எதிர்த்து ஒரு மனுவும், தமிழக அரசின் மனுவை விசாரிப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று உத்தரவிடக்கோரி இன்னொரு மனுவும் என 2 மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. 

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் இந்த வாரம் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் தங்கள் கருத்தை அறியாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது எனத் தெரிவிக்கும் கேவியட் மனுவை வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com