ராஜஸ்தான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அசோக் கெலாட் 

ராஜஸ்தான் முதல்வராக காங்கிரசின் அசோக் கெலாட் புதனன்று பொறுப்பேற்றுக் கொண்டார்    
ராஜஸ்தான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அசோக் கெலாட் 

ஜெய்பூர்: ராஜஸ்தான் முதல்வராக காங்கிரசின் அசோக் கெலாட் புதனன்று பொறுப்பேற்றுக் கொண்டார்    

நடைபெற்று முடிந்த ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நீண்ட பேச்சு வார்தைகளுக்குப் பிறகு ராஜஸ்தான் முதல்வராக காங்கிரசின் அசோக் கெலாட் கடந்த வாரம் பதவியேற்றார்.

இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வராக காங்கிரசின் அசோக் கெலாட் புதனன்று தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்    

முதலில் தலைமைச்  செயலக வளாகத்தில் உள்ள கோவிலில் வழிபாடு செய்தவர், பின்னர் அங்கு அமைந்துள்ள  காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார். 

பின்னர் தலைமைச் செயலகத்தில் தனது அறைக்குச் சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது மாநில தலைமைச் செயலாளர்  குப்தா மற்றும் உயர் அதிகாரிகள் அருகில் இருந்தனர். 

பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அவர் முதலில் நடத்திய கூட்டத்தில் மாநில விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வது  குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com