நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கும் சனிக்கிரகத்துக்கே இந்த நிலையா? நாசாவின் அதிர்ச்சித் தகவல்

பனிக்கட்டிகளினால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத வகையில் சனிக்கிரகத்துக்கு இருக்கும் அந்த அழகான வளையம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கும் சனிக்கிரகத்துக்கே இந்த நிலையா? நாசாவின் அதிர்ச்சித் தகவல்


வாஷிங்டன்: பனிக்கட்டிகளினால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத வகையில் சனிக்கிரகத்துக்கு இருக்கும் அந்த அழகான வளையம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மெல்ல கரைந்து வரும் சனிக்கிரகத்தின் இந்த அழகிய வளையம், இன்னும் 100 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும் மறைந்து போய்விடும் என்றும் நாசா கணித்துள்ளது.

மழை வளையம் என்று அழைக்கப்படும் சனிக் கிரகத்தின் அழகிய வளையம், சனிக் கிரகம் தோன்றியபோதே உருவானதா அல்லது நாளடைவில் உருவானதா என்பது குறித்து விஞ்ஞானிகள் பல காலமாக ஆராய்ந்து வரும் நிலையில் இது இடையில் உருவான வளையம் என்று கணித்துள்ளனர்.

சனிக்கிரகத்தின் வாழ்நாளில் இடையில் தோன்றிய வளையத்துடன் அதனை பார்க்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஜூபிடர், யுரேனஸ், நெப்ட்யூன் போன்ற கிரங்களுக்கும் இதுபோன்ற மெல்லிய வளையமே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

பூமியின் புவியீர்ப்பு விசையை விட சனியின் ஈர்ப்பு விசை அதிகம். வியாழனுக்கு அடுத்தபடியாக பெரிய கோள் சனிக்கிரகமாகும்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com