இடுக்கியில் புதிய அணை: ஆய்வு அறிக்கை தயாரிக்க கேரள நீர்ப்பாசனத் துறைக்கு அனுமதி: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

கேரள மாநிலம், இடுக்கியில் புதிய அணை கட்டுவதற்காக சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீடு ஆய்வு அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில்
இடுக்கியில் புதிய அணை: ஆய்வு அறிக்கை தயாரிக்க கேரள நீர்ப்பாசனத் துறைக்கு அனுமதி: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்


கேரள மாநிலம், இடுக்கியில் புதிய அணை கட்டுவதற்காக சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீடு ஆய்வு அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி எழுப்பியிருந்த கேள்விக்கு, அமைச்சர் திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: 
இடுக்கி மாவட்டத்தில் கேரள அரசின் நீர்ப்பாசனத் துறையால் புதிய அணை கட்டுவதற்காக அறிக்கை தயாரிக்க (டெர்ம்ஸ் ஆஃப் ரெஃபரன்ஸ்) சுற்றுச்சூழல், வனம் அமைச்சகம் 14.11.2018-ஆம் தேதி சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீட்டின்படி (ஈஐஏ) அனுமதி அளித்துள்ளது. 
மேலும், கேரள நீர்ப்பாசனத் துறை மூலம் அளிக்கப்பட்டுள்ள டெர்ம்ஸ் ஆஃப் ரெஃபரன்ஸ் கடிதத்தில் நிபந்தனைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஐஏ அறிக்கை தயாரிப்பதற்கு அடிப்படை புள்ளிவிவரத் தகவல்கள் சேகரிப்பதற்காக தமிழக அரசிடமிருந்து ஏதாவது முன் அனுமதியை மத்திய அமைச்சகம் பெற்றுள்ளதா? எனும் மற்றொரு கேள்விக்கு, அமைச்சர் மகேஷ் சர்மா அளித்த பதிலில், இஐஏ அறிவிக்கை, 2006-ஆம் ஆண்டின்படி சுற்றுச்சூழல் விளைவு அறிக்கை தயாரிப்பதற்கான அடிப்படை தரவுகள் சேகரிக்க தமிழக அரசிடமிருந்து முன் அனுமதி தேவைப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சுற்றுலா நிதி: மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரயேன் தமிழ்நாட்டில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுதொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். 
இதற்கு மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கே. ஜே. அல்ஃபோன்ஸ் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், தமிழ்நாட்டில் 2016-17- ஆம் ஆண்டில் கடலோர பகுதிகளில் சென்னை - மாமல்லபுரம் - ராமேசுவரம் - மன்படு - கன்னியாகுமரி ஆகிய கடலோரப் பகுதி மேம்பாட்டுக்காக சுற்றுலா அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ.99.92 கோடி ஒதுக்கப்பட்டு அவற்றில் ரூ.45.24 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்ட மேம்பாட்டுக்காக 2016-17-இல் ரூ.16.48 கோடி அங்கீகரிக்கப்பட்டு ரூ. 8.24 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 
வேளாங்கண்ணியின் மேம்பாட்டுக்காக 2016-17-இல் ரூ.5.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.2.59 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com