செய்தியாளர்களைச் சந்திக்க நான் அஞ்சியதில்லை: மன்மோகன் சிங்

சேஞ்சிங் இந்தியா என்ற பெயரில் 6 பாகங்களை கொண்ட புத்தகங்களை மன்மோகன் சிங் எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
செய்தியாளர்களைச் சந்திக்க நான் அஞ்சியதில்லை: மன்மோகன் சிங்

சேஞ்சிங் இந்தியா என்ற பெயரில் 6 பாகங்களை கொண்ட புத்தகங்களை மன்மோகன் சிங் எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவின் இடையே மன்மோகன் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, கடந்த 1991ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 சதவீதமாக உள்ளது. இதனால் இடையூறுகள், முட்டுக்கட்டைகளை மீறி, உலக பொருளாதாரத்தில் முக்கிய சக்தியாக இந்தியா உருவெடுப்பது உறுதி. மௌன பிரதமர் என்று என்னை அழைப்பதை நிராகரிக்கிறேன். 

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்தபோது சக மத்திய அமைச்சர்கள் எனக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், மணிசங்கர் ஐயர் மற்றும் நாதுராம் மிர்தா எனக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். எனது நடவடிக்கைகளுக்கு அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் நம்பிக்கை அளித்துள்ளார். என்னை எல்லோரும் விபத்துப் பிரதமர் என்று அழைக்கின்றனர். ஆனால் நான் உண்மையில் விபத்து நிதியமைச்சர் ஆவேன். 

பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்க நான் ஒருபோதும் அச்சப்பட்டதில்லை. நான் ஒவ்வொரு முறை வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பும் போதும் அதுகுறித்து கட்டாயம் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவேன் என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com