அட.. இதில் இந்தியா இரண்டாவது இடமா? கொந்தளிக்கும் வாடிக்கையாளர்கள்

செல்போனில் தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் வரும் போது நாம் கொந்தளிப்பது போதாது என்று இந்த செய்தியைப் படித்தும் கொந்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அட.. இதில் இந்தியா இரண்டாவது இடமா? கொந்தளிக்கும் வாடிக்கையாளர்கள்


செல்போனில் தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் வரும் போது நாம் கொந்தளிப்பது போதாது என்று இந்த செய்தியைப் படித்தும் கொந்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது 2018ம் ஆண்டு ஸ்பேம் எனப்படும் தேவையற்ற அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் மக்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்திருக்கிறது.

முதல் இடத்தில் இருந்த இந்தியாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரேசில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ட்ரூகாலர் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கை மாதத்துக்கு 22.3 அழைப்புகள் என பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.5 சதவிகிதம் குறைவாகும்.

இதுவே பிரேசில் நாட்டு மக்களுக்கு மாதத்துக்கு 37.5 ஸ்பேம் அழைப்புகள் என்ற அளவில் உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 81 சதவிகிதம் அதிகம்.

இவ்விரண்டு இடத்துக்கும் அடுத்த இடத்தில் சிலி, தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இடம்பிடித்துள்ளன.

சரி.. அதிக ஸ்பேம் அழைப்புகளைச் செய்யும் நிறுவனங்கள் யார் என்று கணக்கெடுத்தால் அதில் அடுத்த அதிரடி காத்திருக்கிறது. அதாவது,  இந்தியாவில் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்களே அதிக ஸ்பேம் கால்களை செய்கின்றனவாம். கொஞ்ச நஞ்சமல்ல, சுமார் 91 சதவிகித ஸ்பேம் கால்களை செய்ததே டெலிகாம் நிறுவனங்கள்தானாம். அதாவது சராசரியாக ஒரு பயனாளருக்கு வரும் ஒவ்வொரு 4வது அழைப்பும் ஸ்பேம் அழைப்பாகவே இருக்கிறதாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com