ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்

ஜிசாட்-7ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட்டது.
ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்

ஜிசாட்-7ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், திட்டமிட்டபடி சரியான பாதையில் செல்கிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று மாலை 4.10 மணியளவில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டில், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் இந்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளைப் பொருத்தவரை இதுவரை 12 ராக்கெட்டுகள் அனுப்பப்பட்டன. இதில் 7 வெற்றிபெற்றன. 3 ராக்கெட்டுகள் தோல்வியிலும், இரண்டு பகுதி தோல்வியிலும் முடிந்தன. இப்போது அனுப்பப்படுவது 13 ஆவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டாகும்.

இந்த ராக்கெட் மூலம் முழுவதும் உள்நாட்டில் இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட 2250 கிலோ எடைகொண்ட ஜிசாட்-7ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராக்கெட் அனுப்பும் திட்டத்துக்கான 26 மணி நேர கவுன்-டவுன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.10 மணிக்கு தொடங்கியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com