பாலின விகிதாசார பட்டியல்: இந்தியா 108-ஆவது இடம்

உலக பொருளாதார அமைப்பு (டபிள்யூஇஎஃப்) வெளியிட்ட பாலின விகிதாசார பட்டியலில் இந்தியா 108-ஆவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.


உலக பொருளாதார அமைப்பு (டபிள்யூஇஎஃப்) வெளியிட்ட பாலின விகிதாசார பட்டியலில் இந்தியா 108-ஆவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.
டபிள்யூஇஎஃப் செவ்வாய்க்கிழமை இந்தப் பட்டியலை வெளியிட்டது. பொருளாதார வாய்ப்பு, அரசியல் அதிகாரமளித்தல், கல்வி, நல்ல உடல்நலம் மற்றும் உயிர்வாழ்தல் ஆகிய 4 விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியலில் பல்வேறு நாடுகள் அட்டவணைப்படுத்தப்படும். அந்தப் பட்டியலில், பல்வேறு உயர் பதவிகளை இந்தியப் பெண்கள் பெறுவதற்கு அந்நாடு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். குடிமக்களின் உடல்நலம், உயிர்வாழ்தல் ஆகியவற்றிலும் இந்தியா பின்தங்கியுள்ளது. பாலின விகிதாசார பட்டியலில் ஐஸ்லாந்து 85.8 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து 10-ஆவது முறையாக முதலிடத்தில் இந்நாடு உள்ளது.
நார்வே 83.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், ஸ்வீடன் 82.2 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பின்லாந்து 4-ஆவது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கடந்த ஆண்டிலும் 108-ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com