மத்திய அரசு-ரிசர்வ் வங்கி இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண வேண்டும்: மன்மோகன்

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இடையேயான உறவு, கணவன்-மனைவி உறவு போன்றது; இதனடிப்படையில் இரு அமைப்புகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு
மத்திய அரசு-ரிசர்வ் வங்கி இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண வேண்டும்: மன்மோகன்


மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இடையேயான உறவு, கணவன்-மனைவி உறவு போன்றது; இதனடிப்படையில் இரு அமைப்புகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணப்படுவது அவசியம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
சேஞ்சிங் இந்தியா என்ற பெயரில் 6 பாகங்களை கொண்ட புத்தகங்களை மன்மோகன் சிங் எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவின் இடையே மன்மோகன் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
ரிசர்வ் வங்கியின் சுதந்திரம், தன்னாட்சி ஆகியவை மதிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இடையேயான உறவானது, கணவன்-மனைவி உறவு போன்றதாகும். இதில் பிரச்னைகள் இருக்கலாம், கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். ஆனால், இவற்றுக்கு தீர்வு காணப்படுவது அவசியமாகும். நாட்டிலுள்ள மிகவும் 2 முக்கிய அமைப்புகளான இவை, நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்றுள்ள சக்திகாந்த தாஸுக்கு எனது வாழ்த்துகள். நாட்டுக்கு வலுவான மற்றும் சுதந்திரமான ரிசர்வ் வங்கி அவசியமாகும். ஆதலால், கருத்து வேறுபாடுகளுக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஒன்றாக இணைந்து தீர்வு காணும் என நம்புகிறேன். இதற்காக பிரார்த்திக்கிறேன்.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தல்களின்போது விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி அந்த 2 மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவுள்ளது. இதனால் என்ன விளைவு ஏற்படும் எனத் தெரியவில்லை. ஆனால் மக்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டதால், அதை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. அதற்கு மதிப்பளித்து வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, கடந்த 1991ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 சதவீதமாக உள்ளது. இதனால் இடையூறுகள், முட்டுக்கட்டைகளை மீறி, உலக பொருளாதாரத்தில் முக்கிய சக்தியாக இந்தியா உருவெடுப்பது உறுதி. மௌன பிரதமர் என்று என்னை அழைப்பதை நிராகரிக்கிறேன். பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்க நான் ஒருபோதும் அச்சப்பட்டதில்லை என்றார் மன்மோகன் சிங். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com