ஜல்லிக்கட்டு வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை அணுக பீட்டா அமைப்பு முடிவு  

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்குமாறு, உச்ச  நீதிமன்றத்தை அணுக பீட்டா அமைப்பு திட்டமிட்டுள்ளது. 
ஜல்லிக்கட்டு வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை அணுக பீட்டா அமைப்பு முடிவு  

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்குமாறு, உச்ச  நீதிமன்றத்தை அணுக பீட்டா அமைப்பு திட்டமிட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டா அமைப்பு தொடுத்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேசமயம் தமிழகத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தின் மூலமும், மத்தியய அரசின் ஒத்துழைப்பாலும் கடந்த ஆண்டு எந்த விதமான சிக்கலும் இல்லாமல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தற்போதும் இந்த ஆண்டுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்குமாறு, உச்ச  நீதிமன்றத்தை அணுக பீட்டா அமைப்பு வேண்டுகோள் திட்டமிட்டுள்ளது. 

தற்சமயம் ஆண்டு இறுதி விடுமுறை நாட்கள் துவங்க இருப்பதன் காரணமாக உச்ச நீதிமன்றமானது ஜனவரி 2-ஆம் தேதியன்றுதான் மீண்டும் செயல்படத் துவங்கும். அத்துடன் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் நடைபெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. 

எனவே ஜல்லிக்கட்டு வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக பீட்டா அமைப்பு  முடிவெடுத்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com