விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியின் மூலம் மக்களை முட்டாளாக்கி வரும் காங்கிரஸ்: பிரதமர் மோடி  

விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியின் மூலம் மக்களை காங்கிரஸ் கட்சி முட்டாளாக்கி வருகிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். 
விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியின் மூலம் மக்களை முட்டாளாக்கி வரும் காங்கிரஸ்: பிரதமர் மோடி  

தர்மசாலா: விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியின் மூலம் மக்களை காங்கிரஸ் கட்சி முட்டாளாக்கி வருகிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். 

நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை  முன்வைத்து காங்கிரஸ் பிரசாரம் செய்தது. அத்துடன் அதனை வலிமையான ஆயுதமாகவும் முன்வைத்தது. 

தற்போது ஹிமாச்சல பிரதேசத்தில் ஆட்சி செய்து வரும் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்கிறது. இதனைக் கொண்டாடும் விதமாக  வியாழனன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

2009-ல் ரூ.6 லட்சம் கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், ரூ.60,000 கோடி அளவுக்கு மட்டுமே விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்தது, 

அத்துடன் அப்போது காங்கிரஸ் கொண்டுவந்த விவசாயக் கடன் தள்ளுபடியில் விவசாயிகள் அல்லாத லட்சக்கணக்கானோர் பலன் அடைந்தனர் என்பது பின்னர் சிஏஜி ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்தது.  

இதேபோல் பஞ்சாப், ஹரியாணா மாநில தேர்தலுக்கு முன்னதாகவும் விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை காங்கிரஸ் அளித்தது. ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 

கர்நாடகாவில் கடன் தள்ளுபடி என்ற பெயரில் 800 விவசாயிகளுக்கு அடையாள ரொக்கம் மட்டுமே அளிக்கப்பட்டது. இவ்வாறு விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியின் மூலம் மக்களை காங்கிரஸ் கட்சி முட்டாளாக்கி வருகிறது 

இதேபோல்தான் 'ஒரு ரேங்க், ஒரு பென்ஷன்' திட்டத்திலும் முன்னாள் ராணுவ வீரர்களை காங்கிரஸ்  தவறாக வழிநடத்தியது. 

இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com