Enable Javscript for better performance
ஆந்திரத்தில் 30 வழக்குகளில் தேடப்பட்ட மாவோயிஸ்டு சரண்- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திரத்தில் 30 வழக்குகளில் தேடப்பட்ட மாவோயிஸ்டு சரண்

    By DIN  |   Published on : 09th February 2018 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திரத்தில் போலீஸ் வாகனத்தை குண்டு வைத்தது தகர்த்தது உள்பட கொலை, கொள்ளை என 30 வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு தீவிரவாதி முத்தா ராய் என்ற வீரைய்யா (29) போலீஸில் சரணடைந்தார்.
    ஆந்திர-ஒடிஸா எல்லையில் உள்ள மல்காங்கிரி பகுதியில் செயல்பட்டு வந்த, அவர் வடக்கு கோதாவரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைந்தார். அண்மையில் மாவோயிஸ்டு இயக்கத்தில் இருந்து வெளியேறிய அவர் சென்னையில் யாருக்கும் தெரியாமல் "வெல்
    டிங்' தொழில் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
    இந்நிலையில், மனைவி மற்றும் உறவினர்களின் ஆலோசனையின் பேரில் வீரய்யா சரணடைந்துள்ளார். அவருக்கு உடனடி உதவித் தொகையாக ரூ.25,000 வழங்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கண்ணி வெடி மூலம் போலீஸ் வாகனத்தை தகர்த்து 21 காவலர்களை கொலை செய்த வழக்கு, போலீஸூக்கு தகவல் கொடுத்த சிலரை கொலை செய்த சம்பவங்களில் வீரைய்யா முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai