Enable Javscript for better performance
இந்தியாவிலேயே டெங்கு மரணத்தில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவிலேயே டெங்கு மரணத்தில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு

    By DIN  |   Published on : 09th February 2018 03:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dengue


    புது தில்லி: இந்தியாவிலேயே டெங்கு பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா கூறுகையில், கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. டெங்கு பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம்.

    தமிழகத்தில் மட்டும் 23,294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், 65 பேர் டெங்கு பாதித்து உயிரிழந்தனர். அடுத்தபடியாக, மகாராஷ்டிராவில்  41 பேரும், கேரளாவில் 37 பேரும் டெங்கு பாதித்து உயிரிழந்தனர். நாடு முழுவதும் 253 பேர் டெங்கு பாதித்து உயிரிழந்தனர் என்று தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai