Enable Javscript for better performance
உங்கள் முகத்தில் உள்ள கறைகளை அகற்றுங்கள்: திரிணமூல் தலைவர்களுக்கு ஆளுநர் பதிலடி- Dinamani

சுடச்சுட

    

    உங்கள் முகத்தில் உள்ள கறைகளை அகற்றுங்கள்: திரிணமூல் தலைவர்களுக்கு ஆளுநர் பதிலடி

    By DIN  |   Published on : 09th February 2018 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    keshari-nath-tripathi

    ஆளுநர் மாளிகை மீது சேற்றை வாரி இரைப்பதை விட்டு விட்டு, உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து உங்கள் கறைகளை அகற்றிக் கொள்ளுங்கள் என்று ஆளுநர் கேசரி நாத் திரிபாதி பதிலடி கொடுத்துள்ளார்.
    மேற்கு வங்கத்தில் ஆளுநருக்கும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் இடையே மோதல்போக்கு உச்சத்தை எட்டியுள்ளது. மாநில அரசின் அதிகாரத்தை ஆளுநரின் தலையீடு அதிகரித்துள்ளது. மாநில சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து கூட்டம் நடத்த தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார் என்று திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 
    பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், இப்போதைய மத்திய அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் வேண்டுமென்றே மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
    இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்த ஆளுநர் கேசரி நாத் திரிபாதி இந்த விவகாரம் தொடர்பாக கூறுகையில், "என் மீது குற்றம்சாட்டும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் முதலில் தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து, தங்கள் மீத படிந்துள்ள கறைகளை அகற்ற வேண்டும். ஆளுநர் மாளிகை மீது தேவையில்லாமல் சேற்றை வாரி இரைக்கக் கூடாது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai