Enable Javscript for better performance
உ.பி.யில் தேர்வை தவிர்த்த 5 லட்சம் மாணவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    உத்தரப் பிரதேசத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் காப்பி அடித்து எழுதவிடாமல் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக 5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தவிர்த்து விட்டனர்.
    இதுகுறித்து அந்த மாநில கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    உத்தரப் பிரதேசத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாணவர்கள் காப்பி அடித்து தேர்வெழுதுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நட
    வடிக்கைகள் எடுக்கப்பட்டன. பறக்கும் படைகளும் பயன்படுத்தப்பட்டன. தேர்வெழுதிக் கொண்டிருந்தபோது மாணவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டனர். இதன்காரணமாக, 69,201 பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 2.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வைப் புறக்கணித்துவிட்டனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai