Enable Javscript for better performance
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை: லாலு மகள், மருமகனுக்கு சம்மன்- Dinamani

சுடச்சுட

    

    சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை: லாலு மகள், மருமகனுக்கு சம்மன்

    By DIN  |   Published on : 09th February 2018 02:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதின் மகள் மிசா பாரதிக்கும், அவரது கணவர் சைலேஷ் குமாருக்கும் அழைப்பாணை அனுப்ப தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
    அதன்படி அவர்கள் இருவரும் வழக்கு விசாரணைக்கு மார்ச் 5-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    பிகார் தலைநகர் பாட்னாவில் மிசா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ் குமாருக்கு சொந்தமாக "மிஷைல் பேக்கர்ஸ் அண்டு பிரிண்ட்டர்ஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்நிறுவனத்தின் இயக்குநர்களாக அவர்கள் இருவரும் பொறுப்பு வகித்தனர்.
    இந்நிலையில், "மிஷைல் பிரிண்ட்டர்ஸ்' நிறுவனத்துக்குச் சொந்தமான 1 லட்சத்து 20 ஆயிரம் பங்குகளை தலா ரூ.100 வீதம் 4 போலி நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்தப் பங்குகள் மிகக் குறைந்த விலைக்கு மிசா பாரதிக்கு விற்கப்படுவது போல் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த முறைகேட்டில் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாக அண்மையில் புகார் எழுந்தது.
    இதையடுத்து, இந்தப் புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மிசா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், இந்த வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. இதனிடையே, மிசா பாரதிக்குச் சொந்தமான ரூ.1.2 கோடி மதிப்பிலான பண்ணை வீடு ஒன்றும் முடக்கப்பட்டது.
    இந்தச் சூழலில், இதுதொடர்பான வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.கே.மல்ஹோத்ரா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை மற்றும் மிசா பாரதி தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, லாலுவின் மகளுக்கும், மருமகனுக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
    முன்னதாக, இந்த மோசடி விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆடிட்டர் ராஜேஷ் அகர்வால், தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சுரேந்திரகுமார் ஜெயின், வீரேந்திரகுமார்ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai