Enable Javscript for better performance
சோபியான் துப்பாக்கிச்சூடு: ராணுவ மேஜரின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு- Dinamani

சுடச்சுட

    

    சோபியான் துப்பாக்கிச்சூடு: ராணுவ மேஜரின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு

    By DIN  |   Published on : 09th February 2018 02:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சோபியான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ராணுவ மேஜர் ஆதித்யகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் தமது மகனுக்கு எதிராக தவறாகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 
    சோபியான் மாவட்டம் சாய்குண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் இருவர் பதுங்கியிருப்பதாக கடந்த மாதம் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இரு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் வெடிப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன.
    இதனிடையே, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் முக்கியமாக இளைஞர்கள் ஒன்று கூடி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸாரும், பாதுகாப்புப் படை வீரர்களும் அப்பகுதிக்கு விரைந்து சென்று வன்முறையாளர்கள் மீது தடியடி நடத்தினர். நிலைமைக் கட்டுக்கடங்காமல் போனதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதில் 17 வயது மாணவர் உள்பட மூவர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
    இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில், குறிப்பிடத்தக்க நிகழ்வாக ராணுவ மேஜர் ஆதித்ய குமார் மீது ஜம்மு - காஷ்மீர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அந்த நடவடிக்கைக்கு எதிராக அவரது தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    தனது மகன் மீது தவறான அடிப்படையில் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அதில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai