Enable Javscript for better performance
தொலைக்காட்சிகளில் "ஜங்க் ஃபுட்' விளம்பரங்களுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு- Dinamani

சுடச்சுட

    

    தொலைக்காட்சிகளில் "ஜங்க் ஃபுட்' விளம்பரங்களுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

    By DIN  |   Published on : 09th February 2018 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    central_government

    தொலைக்காட்சிகளில் "ஜங்க் ஃபுட்' (கொழுப்பு}சர்க்கரை-உப்பு நிறைந்த உணவுப் பொருள்கள்) விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதிக்கும் திட்டம் எதுவுமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், "உணவுப் பண்டங்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ள 9 நிறுவனங்கள் சேனல்களில் இந்த விளம்பரங்களை ஒளிபரப்ப மாட்டோம் என்று தாமாகவே முன்வந்து தெரிவித்துள்ளன' என்று பதிலளித்தார்.
    மற்றொரு கேள்விக்கு, "ஜங்க் ஃபுட்' விளம்பரங்களை சேனல்களில் ஒளிபரப்புவதற்குத் தடை விதிக்கும் திட்டம் எதுவுமில்லை என்று மத்திய செய்தி}ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
    இந்த வகை உணவுகள் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எம்.பி.க்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து ஸ்மிருதி இரானி கூறியதாவது:
    இந்த உணவுப் பொருள்களில் உள்ள கொழுப்பு}சர்க்கரை}உப்பு ஆகியவற்றை ஆய்வு செய்ய நிபுணர்கள் அடங்கிய குழுவை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையில், சிறார்களுக்கான சேனலில் "ஜங் புட்' விளம்பரங்களை ஒளிபரப்புவதை தடை செய்யலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தாமாகவே சில நிறுவனங்கள் விளம்பரப் படங்களை ஒளிபரப்ப மாட்டோம் என்று தெரிவித்துள்ளன என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai