Enable Javscript for better performance
முத்தலாக் தடை மசோதாவில் குறைபாடுகள்: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்- Dinamani

சுடச்சுட

    

    முத்தலாக் தடை மசோதாவில் குறைபாடுகள்: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்தலாக் தடை மசோதாவில் பல குறைபாடுகள் இருப்பதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
    அந்த வாரியத்தின் 26-ஆவது ஆண்டு பொதுக் கூட்டம், தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    அப்போது, அந்த வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் கலீல்-உர்-ரகுமான் சஜ்ஜத் நோமானி கூறியதாவது:
    முத்தலாக் நடைமுறைக்குத் தடை விதிக்கும் சட்டம், உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லை. தவறான சட்டத்தை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    அதற்கான மசோதாவிலும் குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை நீக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. அந்த மசோதாவை நாங்கள் எதிர்க்கவில்லை.
    முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் நபர் மீது யார் வேண்டுமானாலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்ற அம்சம் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது என்றார் நோமானி.
    இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜகவுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அந்த அவையில் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai