Enable Javscript for better performance
மேகாலயம்: தேசிய மக்கள் கட்சி வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.290 கோடி!- Dinamani

சுடச்சுட

    

    மேகாலயம்: தேசிய மக்கள் கட்சி வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.290 கோடி!

    By DIN  |   Published on : 09th February 2018 02:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எதிர்வரும் மேகாலய மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் தொழிலதிபரும், எம்எல்ஏவுமான கெயிட்லாங் தார், தனது சொத்து மதிப்பு ரூ.290 கோடி என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
    மேலும், தமக்கு மொத்தமாக 144 வாகனங்கள் உள்ளதாகவும், ரூ.219 கோடி மதிப்புக்கு அசையா சொத்துகள் இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார். இதன் மூலம், மேகலாயத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே கெயிட்லாங்தான் பெரும் செல்வந்தர் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகலாயத்துக்கு வரும் 27-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான வடகிழக்கு தேசிய முன்னணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் கெயிட்லாங் தாரும், அவரது இரு மகன்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
    கெயிட்லாங், முந்தைய தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். இம்முறை அக்கட்சியிலிருந்து வெளியேறி தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளராக உம்ரோய் தொகுதியில் களமிறங்குகிறார். அதன் பொருட்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்த அவர், தனது சொத்து விவரங்களை அதில் குறிப்பிட்டுள்ளார். அதுதொடர்பாக அவர் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்த 69 பக்க ஆவணங்களில், எவ்வளவு சொத்துகள் உள்ளன? என்பது குறித்து விரிவாகத் தெரிவித்துள்ளார்.
    அதன்படி, தற்போது அவருடைய சொத்து மதிப்பு ரூ.290 கோடியாகும். அதில் ரூ.71 கோடிக்கு வாகனங்கள் மட்டுமே உள்ளன. முந்தைய தேர்தலில் கெயிட்லாங், தனக்கு ரூ.235 கோடிக்கு சொத்து இருந்ததாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai