Enable Javscript for better performance
ரேணுகா சௌத்ரி சிரிப்புக்கு பிரதமர் மோடி விமர்சனம்: மாநிலங்களவையில் காங்கிரஸ் அமளி- Dinamani

சுடச்சுட

    

    ரேணுகா சௌத்ரி சிரிப்புக்கு பிரதமர் மோடி விமர்சனம்: மாநிலங்களவையில் காங்கிரஸ் அமளி

    By DIN  |   Published on : 09th February 2018 02:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    parliment

    காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி சிரிப்பு குறித்து பிரதமர் மோடி புதன்கிழமை செய்த விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.
    குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது, திடீரென அவையில் அமர்ந்திருந்த ரேணுகா சௌத்ரி வெடிச் சிரிப்பை வெளிப்படுத்தினார்.
    இதையடுத்து, அவரது செயலை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கண்டித்தார். அப்போது, அவரைத் தடுக்க வேண்டாம். ராமாயணத் தொடருக்குப் பிறகு இப்போதுதான் இப்படி ஒரு சிரிப்பை கேட்க முடிந்தது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அவரது கருத்துக்கு சமூக வலைதளமான சுட்டுரையில் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன், மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரையும் வெங்கய்ய நாயுடு சமமாக மதிக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டது. 
    இந்நிலையில், மாநிலங்களவை வியாழக்கிழமை தொடங்கியதும் இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
    அதைத் தொடர்ந்து அவையை பிற்பகல் 12 மணி வரை வெங்கய்ய நாயுடு ஒத்தி வைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai