Enable Javscript for better performance
விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் இரண்டு மடங்கு உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் இரண்டு மடங்கு உயர்வு

    By DIN  |   Published on : 09th February 2018 10:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    olympic

    ஒலிம்பிக் போட்டி,  ஆசிய விளையாட்டுப் போட்டி, பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக  மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
    இது குறித்து மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளது:
    விளையாட்டுப் போட்டுகளில் பங்குபெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வூதிய தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது .

    அதன்படி ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வீதியம் ரூ. 10000 லிருந்து ரூ.20000 ஆகவும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 8000 லிருந்து 16000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai